வெயிலாடும் கல்லிட்ட வெண்ணை
இளஞானம் மறியேறி இசைத்துவரச், சுதந்தரமாய்
வளமாக நாம்வாழ, வாயசைத்துக் கையாட்டிக்,
களமேறி நின்றதுமே, கைகாலில் ஆணிகளால்
துளைபோட்டுத் தூக்கிடவோ, துதிபாடி நின்றீர்கள்?===================================(01)
மதவாரி, மொழிவாரிப, பிளவுகளை மறைமுகமாய்,
விதையாக விட்டுவிட்டு, வெளியேறிப் போனவர்கள்,
சதிகாணத் தெரியாமல், சாம்பலென நின்றவரே!
புதுஞான வேள்வியெனச் சுதந்தரத்தை எரிப்பீரோ?===================================(02)
கயலாடும் காவிரியைக், கட்டிவைத்துக் காப்பவர்கள்,
சுயலாபக் கழிவுகளைச், சூழ்ச்சியினால் அனுப்பிடவோ?
வெயிலாடும் கல்லிட்ட வெண்ணையைக்,கை யில்,ஊமன்
நயனத்தால் காப்பதுபோல் நடுவரசும் பார்த்திடவோ?=================================(03)