குளம்பொலி

புரவிகள் புறப்பட்டோடிய
வழித் தடம் எல்லாம்
குளம்பொலியின் நாதம் !

புரட்சியாளர்கள் வழி நடந்த
சரித்திரத் பாதை எல்லாம்
சிந்தனை வேகத்தின் ராகம் !

வெகுண்டு சிவந்தது விரிந்த பூமி
அந்த ஆக்ரோஷ உக்கிரகத்தில்
மலர்ந்து வந்தது மனித சுதந்திரம் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jun-15, 10:24 am)
பார்வை : 76

மேலே