அழகிய கனா

இரவில் என் வீட்டுக் கதவை
தட்டும் ஓசை கேட்டது -- அது
நீதான் எனக்கு தெரியும் ......
நான் அவசர அவசரமாக
கதவை திறக்க என்ன ஆச்சரியம் !!!!!!!
பிறை நிலவின் ஒளியில் ..........
மார்கழிக் காற்றின் ஒலியில்.......
மழலை இடமும் காண முடியாத
புண் சிரிப்புடன் ......
காற்றில் ஆனந்த நடனம் புரியும்
உன் கருமை நிற குழல் .........
எனக்கு பிடித்த
உனக்கு பிடிக்காத
பிங்க் நிற சட்டையும்
கருப்பு நிற பேண்ட்டும்
ஆச்சரியத்திலும் அதிசயம் இது ....
சாலை ஓரம் காவலுக்கு நிற்கும்
மின் விளக்குகளின் ஒலியில்
உன் முகம் ...........
அதை ரசித்த படியே
உன்னுடன் உரையாடினேன் ............
இரு நிலவுகள்
தெரு விளக்கிற்கு நடுவில் .........
அடடே ஆச்சரிய குறி !!!!!!!!!!!!!!!!!!!!
உரையாடலில் இடைவேளை ,,,,,,,,,,,,,,,
என் அம்மா,,
என்னடி தூக்கத்துல புலம்புற ??????
என்று கேட்கவே ..
நான் விழித்துக்கொண்டேன் .........
அப்பொழுது தான் தெரிந்தது
அது அழகிய கனா என்று ,,,,,,,,,
உன் அழகான முகத்தை கண்ட
பௌர்ணமி நிலவும்
பொறாமைக் கொண்டிருக்கும் போலும் ..
ஏனென்றால் ,,,,,,,,,,
மறுநாள் ''''''''''''''
அதன் வீட்டில் ஆளைக் காணவில்லை .......
பலமுறை யோசித்தேன் !!!!!!!
காரணம் கண்டு கொண்டேன் கணப்பொழுதில் ,,,,,
அன்று ...
அமாவாசை என்று
அம்மா கூறியதில் இருந்து.............

எழுதியவர் : பொன்மொழி (15-Jun-15, 1:09 pm)
Tanglish : alakiya kanaa
பார்வை : 115

மேலே