என்தோழா போருக் காக --- அறுசீர் விருத்தம்
பெண்பெயரில் ஆண்புகுந்து நகைச்சுவையாய்க்
----- கதைபேசும் பேடிக் கூட்டம் .
மண்வளர்த்த நாகரிகச் செல்வத்தை
----- வதைக்கின்றார் மனிதர் பண்பா ?
நாணமின்றிக் கண்டபடி சிதைகின்றார் .
------ களங்கத்தை கசடாம் இந்தப்
புண்வளர விடலாமா ? புறப்படடா
------ என்தோழா ' போருக் காக ."
( காய் + காய் + காய்
காய் + மா + தேமா )