பொள்ளாச்சி அபி சிறுகதைகள் – திறனாய்வு போட்டி – தல புராணம்

கூலிக்காரனின் மகள் மகேஸ்வரி தன்னைக் கெடுக்க வந்த ராசாவைக் கொன்று விட்டு ஊரை விட்டே ஓடி மறைந்து விடுகிறாள்.அவள் ஓடி விட்ட சம்பவம் தெரியாததால்தான் ஊர் மக்கள் அம்மன், மகேஸ்வரி என்ற சாதாரணப் பெண்ணாக அவதாரம் எடுத்து ராசாவை கொன்று விடுவதாக நம்பி விடுகிறார்கள்.அதற்கேற்றாற்போல் ராசா கொலை செய்யப் பட்ட சமயத்தில் இடியும் மின்னலுமாக வர ,நான்தான் கொன்றேன் என்று அம்மனே சொல்வதாக நினைத்து விடுகிறார்கள். தாங்கள் ஊகம் செய்த விடயத்தை அப்படியே தல புராணமாகப் பரப்பி விடுகிறார்கள்.அது அந்த ஊரில் தலைமுறை தலைமுறையாக நம்பப் பட்டு விடுகிறது. ராசா இறந்தபோது அந்தப் பெண் ஊர்க்காரர்களிடம் சிக்கியிருந்தால் அந்த தல புராணமே உருவாகியிருக்காது. அவள்தான் எழுபது வயதானபின் வேல்முருகனின் காரில் வருகிறாள் என்பதை கதையின் அமைப்பு கெடாத வகையில் அழகாகக் கூறுகிறார் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்கள்.
நாம் கதையோடு ஒன்றி விடுகிறோம்.ஆம்! வேல்முருகனோடு நாமும் காரில் பயணம் செய்கிறோம்; அவரோடு கோவிலில் தரிசனம் செய்கிறோம்; தலபுராணம் கேட்கிறோம்; இளநீர் கூட குடிக்கிறோம்.கோவில் தரிசனம் முடிந்ததும் பார்த்தால் திடீரென்று அவர் நம்மை திரும்பி கொண்டு விடாமலே நம் இடத்தில் இருக்கிறோம்! கனவிலிருந்து .மீண்ட மாதிரியே இருக்கிறது! அப்போதுதான் ஏன் இந்தக் கதையை இவ்வளவு பெரிதாக எழுதினார் என்று புரிந்தது! கதை முழுதும் வேல்முருகனுடனேயே இருக்க வைத்து விட்டார்! அது மட்டுமல்ல.அந்த தல புராணத்துக்கு உள்ளும் அல்லவா நம்மை பயணம் செய்ய வைக்கிறார்! அந்த பெண்ணுக்கு தீங்கு நேரக் கூடாது, அவள் கையாலே அந்த ராசா அழிய வேண்டும் என்று ஆசைப் படுகிறோம்!
வெளிக் கதையிலும் நம்மை ஒன்ற .வைத்து உள்கதையிலும் ஒன்ற வைத்து விடுகிறார்! இதுதான் பொள்ளாச்சி அபி அவர்களின் தனி படைப்பு திறன்! வாழ்க அவர் படைப்பு திறன்!
இது எனது சொந்த படைப்பே என உறுதி கூறுகிறேன்!
ம,கைலாஸ்

எழுதியவர் : ம.கைலாஸ் (16-Jun-15, 11:22 pm)
சேர்த்தது : M Kailas
பார்வை : 117

சிறந்த கட்டுரைகள்

மேலே