விளையாட்டு வளையல்
என்னவளின் கையில் இருந்து
ஒரு சிறு வளையல் துண்டு
கீழே உடைந்து விழுந்து
அழுது கொண்டிருந்தது.........
நான் கேட்டேன் ஏன் அழுகிறாய் என்று?
இவ்வளவு நேரம்
தேவதையின் கையில்
விளையாடி விட்டு
இப்போது தனியாக இருக்கிறேன் என்றது.........
நான் கூறினேன்
நீயாவது அவளிடம்
விளையாடி விட்டு
உடைந்து வருந்துகிறாய்
நான் அவளிடம்
என் காதலை
சொல்லாமலே அழுது கொண்டிருக்கிறேன்.................