ஆத்தா

மனைய வித்து, நகைய வித்து,
காசு எல்லா நீ புரட்ட.
பட்டணத்துக்கு நான் போய்
நல்ல படிப்பு படிக்க.


என்ன பொறியியல் சேர்த்தாயே,
விடுதியில் தங்கு என்றாயே.


எத்தனையோ சாப்பாடு கொண்டு
வந்து சாப்ட்டாலும் - உன்
போல ருசியில்ல.இத
எங்க போயி நான் சொல்ல!


எத்தனையோ படிப்பு
உணர்ச்சிய தந்தாலும் - உன்
போல பாசம் தரல.உன்
மடியில்லாம தூக்கமு இல்ல!


நாலு வருஷமா சேர்த்து வச்ச
கண்ணீரெல்லா நாளைக்கு
விடுமுறையில் ஊர் வந்து
கொட்டிருவேன்.
நழுங்காம அசராம உன் மடியில்
தூங்கிடுவேன்!


ஊர் வந்து அடைஞ்சதும்
கூட்டி வர நீ இருப்பேனு
உன்ன தேடினே!!
வீட்டு வேளயில மறந்திருப்பேனு
நானே நடந்து வந்தேன்.!


தனியாவே பேசிகிட்டு
கால்நடையா நடந்தேன்.
அதே குளத்துல இன்னு தவக்கா
சத்த கேட்டேன்!!


என் வீட மறச்சிகிட்டு ஊர்மக்க
கூடி நிற்க,
என்னாச்சு,ஏதாச்சுனு அவங்கள
தள்ளி விட்டு நான் பார்க!


எனக்கு உசிர் கொடுத்த உசிருக்கு
உசிர் போச்சுனு கூட்டத்துல சொன்னாங்க!
சேர்த்து வச்ச கண்ணீரெல்லா
நான் கொட்ட என்ன தொடாம இருந்தாங்க!!


4வருஷமா உன்ன பிரிஞ்சதுக்கு
இது தான் தண்டனையா!!-என்
ஆசை முகம் பார்க்கமா போனாயே
தாயே,உனக்கு இது தான் தலைவிதியா??!!!♥

எழுதியவர் : இஜாஸ் (18-Jun-15, 12:52 pm)
Tanglish : aaththaa
பார்வை : 55

மேலே