விழிப்பூ வீசு

விழிப்பூ வீசு !
=================================================ருத்ரா

அமெரிக்காவின் ஒக்லஹோமாவில்
டோர்னோடோ எனும்
சுழல் புயல்
ஒரு புள்ளியில் தொடங்கி
புனல் வடிவில்
பெரிதாகிக்கொண்டே
வானம் நோக்கி
நாக்கு நீட்டும்.
இந்த பிரபஞ்சத்தையே
சுருட்டி மடக்கி வெற்றிலை போட்டுக்கொள்ளும்..
அன்று கல்லூரி வகுப்பில்
தமிழ் பாடம்.
"அகநானுறு களிற்றியானை நிறை"யில்
திடீர் என்று உன் முகம் கண்டேன்
ஆயிரக்கணக்காய் களிறுகள் சூழ்ந்தன.
அந்த
ஓக்லஹோமா சுழற்புயலில்
எல்லாம் மேலே பறந்தன.
கட்டிடங்கள் சிதலங்க்களாய்
வான மேகங்களுக்குள்.
நகர பேருந்துகள் கூட அல்வாத்துண்டுகளாய்
ஏதோ ஒரு அரக்கன் வாயில்..
அண்ண சாலையே
நீண்ட நெளிந்த துப்பட்டாவாய் வானத்தில்...
மெரீனாவின் மணல் வெள்ளம்
வானத்தில் தலை விரிகூந்தலாய்...
உன் விழிகள்
என் விழிகளில் கலக்கும் வரை.
இந்த கடல்கள் கூட மேலெழும்
சடை பின்னிவிட ஒரு "பார்லர்" தேடி...
இந்த உலகம் காப்பாற்றப்படுவது.
என் கண்ணை நோக்கும்.
உன் கண்ணில் தான்.
உன் விழிப்பூவை என் மீது வீசு.

================================================

எழுதியவர் : ருத்ரா (18-Jun-15, 3:07 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 57

மேலே