எல்லாம் மொபைல் மயம் - 12293

வேப்ப மர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுது

இது பழையபாடல்........

உள்ளங்கை பிடியில் இருந்து
உலகையே ஆளுது

இது என் மனசின் பாடல்....

செல்போன்னு அதுக்கு பெயரு - மயங்கி
செத்து விடாதே - மனுசா உன்

செறிவான அறிவை இழந்து
சொக்கி விடாதே......

அவதாரம் அது எடுக்கும்
அழகழகா உன்னை மயக்கும்....

அடிமையாய் அதுக்கு நீயும் ஆகிவிடாதே - உன்
ஆயுளை மண்ணாய் ஆக்கி - மென்டலாகாதே......!!

எழுதியவர் : ஹரி (19-Jun-15, 7:35 am)
பார்வை : 110

மேலே