சில கண்ணாடிகள்
சுண்ணாம்புச் சுவர் சாய்ந்த
சுக்குநூறு நினைவுகளின்
ஒவ்வொரு துண்டுகளையும்
தொட்டுத் தொட்டுப் பார்த்தே
இதயத்தில் முளைத்த அத்தனை
வலித்த விரல்களுக்கும் அழுதுவிடவே
கண்கள் முளைக்கின்றன..
அத்தனை கண்களையம்
ஆசுவாசப்படுத்திவிடவே
இடைமறிக்கும் பலவாறாக
கன்னத்தில் கைவைத்தும்
தலை சொறிந்தபடியும்
கதவிடுக்கில் கை சிக்கியும்
ஆ வென்று கத்தாதவாறு
அப்படியே பார்த்தவாறு சில
கைக்குட்டை முகங்கள்..
புரண்டு படுக்கையில்
அக்கண்ணாடியுடைந்து
மீண்டுமொரு புது கண்ணாடியில்
சாய்ந்தவன் எழுகிறேன்
வேட்டி இறங்கியவாறு..
போதும்
இந்தக் கனவுகளுக்கு
இங்கிதமே தெரியாது..
--கனா காண்பவன்

