எனக்கு எதுவும் வேண்டாம்
................................................................................................................................................................................................
வரவேண்டாம் என்று சொல்ல
வாசல் வரை வந்தேன்..
இர(வு) ஏழு மணிக்கு என் இல்லத்துக்கு நீ
வரவேண்டாம்....
தரவேண்டாம் என மறுக்க
தாழ்வாரம் வரை வந்தேன்...
இரண்டு எட்டில் முடிகிற உன் அலைபேசி எண்ணை நீ
தர வேண்டாம்...
புரியவேண்டாம் என்று சொல்ல
புறப்பட்டு வந்தேன்..
மருமகளுக்கான நகையை உன்தாய் எனக்கணிவித்தார்.. உனக்குப்
புரியவேண்டாம்...
மறக்க வேண்டாம் என்று சொல்ல
மௌனமாக வந்தேன்..
இறுக்கிப் பிடித்து இதழ் வருடிக் கெஞ்சுகிறாய்..
சரி, சரி... தொலை, மறக்க மாட்டேன்..! !