நீயும் நானும் யாரோ இன்று - போட்டிக் கவிதை
நீயும் நானும் யாரோ இன்று…?!
நினைவில் வாழக் கற்றது நன்று…!
உன் பிரிய வார்த்தைகளை
விதையாய்த் தூவினேன்
என் ஈர இதயத்தில் அன்று…...
விறு விறுவென விருட்சமாகி
நம் காதல் பூஞ்சோலை
பூத்திடும் என கனா கண்டேன்..
ஆனால், இன்று......
உன் மௌனத்தின் வேர்கள்
நாளும் என் இதயத்தை
குத்தித் துளைக்கின்றன...
உன் ஊடுறுவலின்
தாக்கம் உணர்கின்றேன்
என் உச்சி முதல்
பாதம் வரை...!!
என்னுள்ளே நீ...
நீ மட்டுமே என்னுள்ளே…..!!
வேதனையின் வீரியம் குறைக்க
நித்தம் ஊற்றுகின்றேன்
என் கண்ணீர் மருந்தை..
வலி...ரணமானது......!!!
ஜீவனின்றி ஜீவிக்கும் என்னை
உயிர்த்தெழச் செய்ய - வேண்டும்
உன் காதல் சிகிச்சை........!!
வாடிய இதயத்தைக் காத்திட
வந்துவிடு என் கண்ணா.............
வாழ்ந்திடுவோம் நம் வாழ்வை
வற்றாத நம் காதலுடன்...........!!!
நினைவில் வாழக் கற்றது நன்று,
நீயும் நானும் யாரோ இன்று……!!!
இணைந்து வாழும் காலம் என்று....?!