என்னாக போகிறது

என்னாக போகிறது
சமூகத்திற்கெல்லாம்
பயமில்லை
சற்றே ஆரத்தழுவு
தலைக்கோது
மடிசாய்
கதைபேசு
கவிதை கேள்
அர்த்தமற்று சிரி
அந்த அர்த்தத்தில் பார்
கைகளை இணைத்து நட

பாட்டென சொல்லி உரைநடை படி
இதழ் பரிமாற்றம் செய்
இரவின் பணி செய்

விஷத்தையும் அமிர்தத்தையும்
சேர்த்து சில
ஊடல் கூடங்களை நடத்து

குறைவற்ற காதலையும்
அப்பப்போது நுழைகின்ற
காமத்தையும்
நிறைவாக காட்டு

யார் என்ன செய்ய இயலும்
என்னாக போகிறது தாழிட்ட
என் கனவுக்குள்

எழுதியவர் : கவியரசன் (19-Jun-15, 11:12 am)
பார்வை : 85

மேலே