காதல் ஒரு அழகிய கவிதை

உலகில் மனிதன் படைக்கப்பட்டதே
காதல் என்ற வார்த்தைக்கு
உயிர் ஊட்டதான்..!
கம்பன் ஆனால் என்ன
வள்ளுவன் ஆனால் என்ன
காதல் யாரையும் விட்டு வைப்பதில்லை..!
மௌனமானாலும் சரி,
மரணமானாலும் சரி,
காதல் எதையும் தாண்டி
பேசும்...!
விண்மீன்களிலும்
கண்மீன்கள் தேடுவது
காதலித்தவர்கள் முகம் தான்..!
என்ன செய்தது இந்தக் காதல்
என்னை இப்படி பாடாய்
படுத்துகிறது..!
கடவுளுக்கும் காதல் வரும்
மனிதனாய் பிறந்திருந்தால்..!
பிரம்மனுக்கும் பொறாமை கூடும்
நம்மை போல காதலர்களை
கண்டு விட்டால்...!
தாஜ்மஹால் மட்டும் இல்லை
காதலின் அடையாளம்
காதல் மட்டும் இல்லையென்றால்
இந்த பூமியே நடமாடும்
போர்க்களம்..!
"love is blind" என்று சொன்னவர்களுக்கும் இந்தக்
காதல் கண்தானம் செய்யும்..!
"love is pain" என்று
சொன்னவர்களுக்குமே
இந்த காதல் மட்டுமே
மருந்தாகும்...!
காதலுக்கென்று ஒரு தினம்
கொண்டாடுவதை விட்டுவிட்டு
தினம்தினம் காதலைக் கொண்டாடுவோம்
- இப்படிக்கு என்றும்
காதலுடன் ரா.ஜெகன்

எழுதியவர் : ரா.ஜெகன் (19-Jun-15, 12:46 pm)
சேர்த்தது : Jegan
பார்வை : 115

மேலே