செல்வ மகள்

செ ல் வ ம க ள்

கருமம் அதை கண்ணாய் கொண்டு
தருமம் அதில் தழைத்தோங்க

வன்மைதனை ஒழித்தொழுகி
வாய்மையதில் வித்தாய் கொண்டு

காலமதை கடமை வைத்து
ஞானம் அதை கருத்தாய் கொண்டு

சீற்றமற்ற தோற்றத்துடன்
சிறம் தாழ்த்தி ஓம்பல் கொண்டு

தூய்மைதனில் வீற்றிருக்க
இன்மையுடன் வாய்ச்சொல் கொண்டு

அறம் அதனை ஆற்றலுடன்
மறம் என்ற தனிமையை கொண்டு

களம் இறங்கி காரியம் செய்தால்
குலம் விளங்கும், ஞாலம் போற்றும்

செல்வமகள் குடிகொள்வாள்!!!
செழித்தோங்கும் தொழில் அதுவே!!!!

பிரியமுடன்
அசுபா....

எழுதியவர் : அசுபா (19-Jun-15, 7:11 pm)
சேர்த்தது : அசுபா
பார்வை : 73

மேலே