பாசம்

பா ச ம்

தேனமுதாய் திளை சுவையாய் தந்த தாயின் பாசம்,
பாலமுதாய் பசும்பாலாய் ஊட்டி வளர்த்த தந்தை நேசம்,
காலமெல்லம் கண்மணியாய் காத்தல் வேண்டும்!
வேசம் போட்டு மோசம் செய்து பெற்ற பாசத்தினை வீதியிலும் விடுதியிலும் விடுதல் மோசம்!!!!

மாலையிட்ட மன்னவனின் மனம் மகிழும் காதல் பாசம்,
தாரமென்று தனை கொடுத்து தாய்மையுடன் பகிர்ந்த பாசம், காலமெல்லாம் காதல்கொண்டு காத்தல் வேண்டும் !
பங்கம்கொண்டு காதலின்றி கர்வம்கொண்டு, பாதியிலே
பிரிதல் மோசம்!!!

சோதனையும் வேதனையும் சூழ்ந்து நின்ற போதினிலும்,
சாதனையும் சாகசமும் மகிழ்ந்து வந்த போதினிலும்,
வாடி நின்ற பாசங்களை, அன்பு கொண்டு அணைத்தல் வேண்டும் !
கூடி நின்று கோர்த்து நிற்க , கோடி நன்மை கிட்டிடுமாம்,
எந்நாளும் வெற்றி பெற்றிடுமாம்!!!!

பிரியமுடன்
அசுபா....

எழுதியவர் : அசுபா (19-Jun-15, 7:04 pm)
சேர்த்தது : அசுபா
Tanglish : paasam
பார்வை : 138

மேலே