ஹைக்கூ --- கள்
ஆடை குறைந்த உடுப்புகளில்
உயர்ந்திருக்கிறது
தன்மானத்தின் விலைவாசி..!!
* * *
வாசல்கள் சுவாசிக்கின்றன;
காற்றானோம் நாம்.
* * *
இருட்டிற்கு
மனிதர்களை கண்டால்
பயம் போலும்..!!
வெளிச்சத்தை தேடி கொள்கிறது..!!
* * *
சிலர் ஆச்சரியப்பட்டனர்;
சிலர் அதிர்ச்சிக்குள்ளாயினர்
சிலர் தலைகுனிந்தனர்
சிலர் பதிலுரைத்தனர்
சிலர் மறுதலித்தனர்
சிலர் மட்டுமே,
என்னை போலவே உதிர்த்தனர்;
காரணமற்ற ஒரு புன்சிரிப்பினை..