மனங்களுக்கு மருந்தாகும்
உதயமானாலும் அஸ்தமனம் ஆனாலும்
ஆதவனின் நிலையோ ஆபரணத்தங்கமே !
உதிக்கும் காலையோ உற்சாகம்பிறக்கும்
அஸ்தமிக்கும் மாலையோ அற்புதம்தானே !
பொங்குகடல் பொன்னாகும் பொற்கதிரால்
பொன்னாடை அணிவித்த பெண்ணாகும் !
பொங்கிடுமே உள்ளங்களும் இன்பத்தால்
பொறுமை இழப்போரின் நிலைமாறிடும் !
கனலாய் கொதிக்கும் மனமும்குளிரும்
அலைபாயும் நெஞ்சும் அமைதிபெறும் !
விழிகளுக்கும் விருந்தாகும் காட்சியிது
மனங்களுக்கு மருந்தாகும் மாட்சியிது !
பழனி குமார்