என் கிராமம்

கிராமம் இயற்கை
எழில் கொஞ்சும்
சோலைவனம்
பார்வையை கவர்ந்திழுக்கும்...
பசுமை மிகு நந்தவனம்...
கிளை விரித்து குடைபிடிக்க
நீண்ட நெடுமரம்
படுத்துறங்க புள் மெத்தை...
இயற்க்கை அன்னை கொடுத்த
வரம் எல்லாம் வாங்கிவந்து
பத்திரப்படுத்தி வைத்தோம்
எம் கிராம அழகு பூசெரியும்
சோலைவனத்தை...
கை கால்கள் தலையோடு
மனித மாறுவேடம்
பூட்டி
சோலக்காட்டு
பொம்மையையும்
நிற்க வைத்தோம்
பறவை இனத்தை விரட்டி
எம் பயிற் காக்க
விவசாயம் செழிப்படைய...
படித்து தேர்ந்த
மனிதரிடமிருந்து எம்
அடையாளம் காக்க
ஒன்றும் செய்யமுடியாததேனோ!!!?!
படம்-சகோ தமிழ் பித்தன்

எழுதியவர் : (21-Jun-15, 10:47 am)
Tanglish : en giramam
பார்வை : 191

மேலே