மன்னியுங்கள் அப்பா

வளர்பிறை நிலவாய் அன்னை இருக்க-தேய்பிறையாய் உனை பார்த்தேனே.!
மந்திரமாய் அன்னை சொல் இருக்க
தந்திரமாய் உன் சொல்லை வெறுத்தேனே.!
அன்னை மடியில் சுகம் இருக்க
தந்தை தோளை மறுத்தேனே.!
வாழைக்கனியாய் அன்னை இருக்க
தோலாய் உனை எறிந்தேனே.!
அன்னை கண்ணில் நீர் வடிந்தால் நெஞ்சம் நொந்து போவேனே..உந்தன் கண்ணீர் வெந்நீராய் தினமும் அதிலே
குளித்தேனே.!
ஆலமரமாய் அன்னை இருக்க
சின்னஞ்செடியாய் உனை மிதித்தேனே.!
கருவறையாய் அன்னை இருக்க
வெறும்அறையாய் உனை பூட்டினேனே.!
ஆண்பிள்ளை அன்னைக்கு
பெண்பிள்ளை தந்தைக்கு எனும்
தவறான கூற்றைப் படித்தேனே.!
அன்பெனும் முத்தாய் அன்னை இருக்க அதையுகமென காத்தசிப்பி
உனை மறந்தேனே.!
உன்னில் பாதி அவள் என்று
என்று நானும் உணர்வேனோ..!
மன்னியுங்கள் அப்பா..