கைதொலைபேசி

வாழ்க்கையில் அத்தியாவசியத்தை
தகர்த்து ஆரம்பரத்தை அழைகின்றோம்!!
கையிலே கைதொலைபேசி
வந்தவுடன் நாம் கடிதத்தை
மறந்து விட்டோம்!!
நெஞ்சிலே சுமக்கின்ற ஞாயபகத்தை
வெறும் குரலாலே சொல்லிவிட்டோம்!!
எல்லா வசதியும் இதனுள்ளே
திணித்தார் மேனாட்டார்!!
இதனால்,மரபு பழக்க வழக்கங்களை
மறந்து விடுவோம் என்பதை அவர்
எண்ணியா பார்த்தார்??
நாடு முழுதும் பரப்பி
விட்டார் இதனை- இன்று
மாடு மேய்ப்பவன் கையிலும்
இருக்கிறது.வேதனை!!!
சிறுசில் இருந்து பெரிசு வரை
பயன்படுத்தி விட்டார் - இதனால்
கதிர் வந்து தாக்கி,உலகில் பாதி
மனிதர் இறந்து விட்டார்!!
எண்ணத்தை எல்லாம் இதிலே
கொட்டி மூடரானார் சில பேர் உலகில்
எண்ணித்தான் இருக்கிறேன் நானும்
இதனை தலை கொட்டி புதைக்க வேண்டும் மண்ணில்!!
எத்தனையோ பயன்பாட்டை
இதனால் மட்டும் நாம் இழந்து விட்டோம்.!
எத்தனையோ காலமெல்லாம் நாம்
இதனுள் நுழைந்தே வாழ்கையினை
முடக்கி விட்டோம்!!
வெளிச்சம் கொடுக்கும் கைவிளக்கு,
ஊருக்கு அனுப்பும் கடிதங்கள்,
படம் எடுக்கும் ஒளிபடக்கருவி,
எண்கள் சுழற்றி பேசும் தொலைபேசி
கையில் பார்க்கும் கைகடிகாரம்
சின்னஞ்சிறுசின் விளையாட்டு பொருள்கள்,
இவை எல்லாம் இன்று நாம் மறந்து விட்டோம்-இதனால் மட்டுமே
நாம் இழந்து விட்டோம்!!
கண்டு பிடித்த மனிதன் இன்று
வாழ்ந்தால் நிசத்தை தான்
சொல்லுகிறேன்,அவன் தலையில்
அடித்தே இறந்து போவான்!!
மனிதன் இங்கே சிந்தித்தே
இதனை அழிக்க வேண்டும் நொடியிலே.
மறந்து நீங்கள் விட்டால் உங்கள்
உயிரும் போகும் ஓர் நாள் இதனாலே!