பீரங்கி குழாயில் பூனைக்குட்டி

'அர்ஜுன் என்னும் பீரங்கி வண்டி தற்போது இந்தியாவின் இன்றியமையாத போர் ஆயுதமாகும். இது மொத்தமாக இந்தியாவிலே தயாரிக்கப்பட்டது. இதன் வரைவு முதல் உருவாக்கம் வரை சென்னையிலேயே நடந்தது'- என்ற செய்தியை தமிழ் நாளிதழ் ஒன்றில் சண்முகராஜன் படித்துக் கொண்டிருக்க..'தாத்தா..தாத்தா' என்று மூச்சிரைக்க ஓடி வந்து கட்டிக் கொண்டான் அர்ஜீன்.

தாத்தா..என்னோட பேர்ல கூட டேங்க் இருக்கா?

டேங்க்'கா? அப்டீன்னா.

டேங்க்'னா பீரங்கி வண்டி தாத்தா...என் பேர்ல இருக்கா?

ஆமா இருக்கு! உனக்கு எப்படி தெரியும் நான் இப்ப படிச்சிட்டு இருந்ததை கேட்டீயா?

அய்யோ! தாத்தா, நீ இப்பதான் இந்த நியூஸ் படிக்கிறியா? இது 'ஓல்டு நியூஸ்.லாஸ்ட் மந்த்தே எங்க மிஸ்' இத பத்தி சொன்னங்க!

அப்பிடியா? என்ன சொன்னாங்க?

'அர்ஜீன் இஸ் பிக் டேங்க்..இட்ஸ் வெரி பவர் புள்..இட்ஸ் புள்ளி மேடு பை இன்டியா' என்றான்.

தமிழ்ல சொல்லுயா! தாத்தாக்கு புரியல இல்லை.

தமிழ்லய, 'ம்ம்ம்' சொல்றேன். அர்ஜீன் ஒரு பெரிய பீரங்கி வண்டி, 'ம்ம்ம்' அப்புறம்..அப்புறம் என்று தலையை சொரிந்தான்.

சரி தெரியலனா விடு அச்சு..அப்புறம்?

மிஸ் அப்படி சொன்னதுல இருந்து, என் ப்ரண்ட்ஸ் ஜோசப், கண்ணன் எல்லோரும் என்னை 'டேங்கர்..டேங்கர்'னு கூப்பிடுறாங்க..தாத்தா!

ஒஹோ! அதுக்கு நீ என்ன சொன்ன?

அட்லீஸ்ட்..என் பேர்ல டேங்க் இருக்கு உங்க பேர்ல எதுவுமே இல்ல போங்கடா
'சிம்பான்சிஸ்'னு திட்டிடேன் தாத்தா..!

அப்படியெல்லாம் ப்ரண்ட்ஸ்'ச திட்ட கூடாது. அப்புறம் டேங்க்'க பீரங்கி வண்டினு தமிழ்ல சொல்லனும் அச்சு.
சரியா? நீ சமத்தில்ல..என்றார்.

சரி..ஆனா அந்த டேங்க்'க,
ஓ சாரி தாத்தா! பீரங்கி வண்டிய நீங்க எனக்கு காட்டனும் சரியா? என்றான்.

சரி..நாளைக்கு போகலாம் என்றார்.

தாத்தா'ன்னா தாத்தா'தான், அப்பிடியே எனக்கு குல்பி வாங்கி தரனும் என்று சொல்லி கன்னத்தில் முத்தமிட்டான்.

மறுநாள் காலையிலேயே அர்ஜீனும் அவன் தாத்தாவும் 'ஸ்பெசல் பர்மிசன்' வாங்கி பக்கத்தில் இருந்த இராணுவ பயிற்சி நிலையம் சென்றனர்.

அச்சு..அச்சு..போதும்! சொல்ற இல்ல அதிகமா குல்பி சாப்பிடக் கூடாது சளி பிடிக்கும் என்றார்.

ஒன்னே ஒன்னு..இது பைனல் ஒன் தாத்தா ப்ளீஸ்...என்ற படியே 'வாவ்'
எவ்ளோ பெரிசு இந்த பீரங்கி வண்டி...அது என்ன தாத்தா பைப் மாதிரி என கேட்டான்.

அந்த குழாயில இருந்துதான் பீரங்கிக்குண்டு வந்து எதிரிகளை தாக்கும் என்றார்.

அந்த குண்டு நம்ம மேல பட்டிச்சின்னா ரத்தம் வருமா தாத்தா? அதுக்கு ஏன் அர்ஜீன் அப்டின்னு என் பேர் வெச்சாங்க? என பீரங்கி வண்டியை பார்த்த அர்ஜீனுக்கு ஓயாத கேள்விகள் மனதில் தோன்றியது.

அந்த குழாயில இருந்து நெருப்பு வரும். அந்த குண்டு நம்ம மேல பட்டிசின்னா எரிஞ்சி சாம்பல் ஆயிடுவோம் அச்சு.

அப்டியா 'ஓ மை காட்' என்றான்.

அப்புறம்..அர்ஜீனன் வில் வித்தையில மிகவும் பிரபலம். அவன் குறி பறவையோட சின்ன கண்ணுக்கு வெச்சாலும் அம்பு கட்சிதமாக கண்ணுக்கே பாயுமாம்.

அதுபோல, பீரங்கி வண்டி குறி வைத்து குண்டு போடுவதால்..இந்த பெயர் வைத்திருக்கலாம் என்றார்.

ஓகே..வீட்டுக்கு போலாம் தாத்தா! என்று கிளம்பிய அர்ஜீன் திரும்பி நின்று ஒருமுறை பீரங்கி குழாயை உற்றுப்பார்த்தான்.

'இருங்க தாத்தா வாரேன்' என்று சொல்லி திடிரென்று பீரங்கி வண்டியை நோக்கி ஓடினான்..

அச்சு...அச்சூ..எங்க போற என்று பின் தொடர்ந்தார்.

இளங்கன்று பயமறியாது என்பது போல் பீரங்கி வண்டி மேல் ஏற முயற்சித்து கைகள் எட்டாமல் தவறி கீழே விழுந்தான்.

அவன் தாத்தா மூச்சிரைக்க ஓடிவந்து...அச்சு..அச்சு..
உனக்கு என்ன ஆச்சு என்று கை கால்களை தடவி கொடுத்து 'நீ ரொம்ப பேட் பாய் ஆயிட்ட அச்சு' வர வர சொல்ற பேச்சே கேட்க மாட்டீங்ரா..எதுக்கு இப்படி பன்ன? என்றார்.

இல்ல தாத்தா! நீங்க தானே சொன்னீங்க அந்த பைப்ல இருந்து நெருப்பு வரும் அது பட்டிச்சின்ன நம்ப சாம்பல் ஆயிடுவோம்னு.

அதுக்கு இப்போ என்ன ஆச்சி உனக்கு.

அங்க பாருங்க தாத்தா.

எங்க? அச்சு.

அந்த பீரங்கி வண்டி பைப்ல ஒரு சின்ன பூனைக் குட்டி இருக்கு பாருங்க தாத்தா.பைப்ல இருந்து நெருப்பு வந்த சின்ன பூனை எரிஞ்சி சாம்பல் ஆயிடும் இல்ல..அதான் மேல ஏறி..அதை கீழ இறக்கி விட்டுவிடலாம் தாத்தா என்றான்.

அந்த பீரங்கி வண்டியை வெறும் பார்வைக்காக மட்டும் வைத்திருக்கிறார்கள் அது வெடிக்காது என்று அறியாத அர்ஜீன் அந்த பூனைக் குட்டி மீது வைத்திருந்த அன்பு, பரிவைக் கன்டு பெருமைக் கொண்டார்.

'உலகம் அறியாத பிள்ளைக்கு இருக்கும் அன்பு
கூட, எல்லாம் அறிந்த நம்மை போன்ற மக்களுக்கு இல்லையே' என்ற எண்ணம் மனதில் ஓடிக் கொண்டிருக்க.

என்ன தாத்தா அமைதியா இருக்கீங்க குட்டிப்பூனையை இறக்கி விடலாம் தாத்தா ப்ளீஸ்..என்றான்.

கண்டிப்பா! அந்த கேட்ல அங்கிள் கிட்ட சொல்லி இறக்கி விடலாம் அச்சு..என்று சொல்லி அவனை சமாதானம் செய்து வீட்டை நோக்கி நடக்க, எப்ப தாத்தா அந்த குட்டிப்பூனைய இறக்கி விடுவாங்க? என்றான் மறுபடியும்.

நாளைக்கு கண்டிப்பா இறக்கி விட்டுறுவாங்க அச்சு.

அதுவரைக்கும் குண்டு வெடிக்காதா தாத்தா? என்று
அப்படியே கேள்வி பதிலோடு வீட்டை நோக்கி நடந்தனர்.

எழுதியவர் : அரிபா (22-Jun-15, 1:20 am)
பார்வை : 409

மேலே