பசி

வலிக்கிறது என்று சொல்ல
வாப்பா இல்லை
பசிக்கிறது ........
பால் கொடுக்க உம்மாவும் இல்லை
வேலைக்கு செல்ல
வயசும் பத்தாது !!!
நீங்கள் கொட்டும்
ஒவ்வொரு சோற்று கூறுகளிலும்
பற்றி எரியும் பசியில்
உண்பதட்கு உணவின்றி
உயிரை விடும் என் போன்ற
பிஞ்சுகளின் முகங்களை
ஒரு முறை எண்ணிப்பாருங்கள்

எழுதியவர் : subuhan (22-Jun-15, 3:36 pm)
Tanglish : pasi
பார்வை : 69

மேலே