அண்ணா

முதன்முதலில் 'அ' போடக் கற்றுக்கொண்டது
அம்மாவிடமோ,ஆசிரியரிடமோ இல்லை...
அண்ணனிடம் இருந்து தான்!!!

முதன்முதலில் அடி வாங்கியது
அம்மாவிடமோ,அப்பாவிடமோ இல்லை...
அண்ணனிடமிருந்து தான்!!!

தங்கைகளின் முதல் தோழன்
அண்ணன் தான்!!
அம்மாவிடம் கோள்மூட்டி அடிவாங்கி தரும் முதல் எதிரியும்
அண்ணன் தான்!!!

பிடித்த பாடல் தொடங்கி
பிடித்த நடிகர் வரை
அண்ணன்களின் விருப்பமே
தங்கைகளின் விருப்பமாகிறது...

அப்பா வாங்கி தந்த சாக்லெட் முதல்
டிவி ரிமோட் வரை
அண்ணன்-தங்கை சண்டையில்
எதுவும் தப்பியதில்லை...

எதுவும் தெரியாவிட்டாலும்
தங்கைகளின் முன்
எல்லாம் தெரிந்தவர்களாக காட்டிக் கொள்ளவே அண்ணன்கள் விரும்புகிறார்கள்...

தங்கைகளின் hero க்களாக
அண்ணன்கள் வலம்வருகிறார்கள்...
சிலசமயம் கோமாளிகளாக
நடிக்கவும் கற்றுக்கொள்கிறார்கள்...

அம்மா,அப்பாவின் கோபத்தைக் காட்டிலும்
அண்ணனின் சிறு மௌனமே
தங்கைகளை கலக்கமடைய வைக்கிறது...

தங்கைகளை கிண்டல் செய்து
விமர்சிக்கவும்,மனதிற்குள் ரசிக்கவும் செய்கிறார்கள்
இந்த அண்ணன்கள்...

எழுதியவர் : நாகலட்சுமி (23-Jun-15, 12:34 pm)
Tanglish : ANNAA
பார்வை : 244

மேலே