கண்ணால் காண்பதும் பொய்தீர விசாரிப்பதே மெய்

அடர்ந்த காடு அதற்கு புதிய வருகையாக ஆந்தை ஒன்று வந்தது ....அந்த காட்டில் உள்ள விலங்குகள் இதுவரை ஆந்தையை பார்த்தது இல்லை..சரி வாருங்கள் கதைக்கு செல்வோம் ....

இரவு நேரம் ஒரு ஜோடி முயல்கள் அவசரமாக சென்றன ...திடீர் என்று மரத்தில் இருந்து எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டது ஆந்தை ...

முயல்கள் பயத்துடன் இந்த இரவு நேரத்தில் யார் பார்த்தது என்று அதிர்ச்சியாகி விட்டது ..மறுபடியும் முயல் கேட்டது நங்கள் யர்ர் ..பதில் வந்தது முயல் என்று ..முயல்கள் பயத்துடன் வீட்டிற்கு திரும்பிவிட்டது ..ஆந்தைக்கு இரவு நேரத்தில் நன்றாக கண்கள் தெரியும் என்று முயலுக்கு தெரியாது ..

முயல் அதன் நண்பனான எருமையிடம் சொன்னது, அதற்கு ஏதோ சக்தி உள்ளது ..இதை கேட்டு அது சிரித்து எப்படி சொல்ல முடியும் வா நானும் வருகிறேன் ,என்னை யார் என்று சொல்கிறாதா பார்ப்போம் .

எருமை முயலுடன் அந்த மரத்தின் கீழ் நின்று குரல் கொடுத்தது ,..உடனே ஆந்தை வாருங்கள் எருமையாரே ..எருமையும் அதிர்ச்சியுடன் இதற்கு ஏதோ சக்தி உண்டு என்று நினைத்தது ...

எருமையும் முயலும் தங்கள் கூட்டத்திற்கு திரும்பி மற்ற விலங்குகளிடம் சொல்லியது ,,மற்ற விலங்குகளும் இதை நம்பி அதை கடவுளாக கொண்டாட தொடங்கின ...


ஆந்தையும் இந்த உபசாரத்தை ஏற்று கர்வத்துடன் வலம் வரத்தொடங்கியது .....

ஆனால் பகலில் மட்டும் தடுமாற்றத்துடன் ,காட்டில் இடித்து கொள்ளும் ...

ஒருநாள் காட்டை விட்டு வெளியே செல்லவேண்டிய சூழ்நிலை அதுவும் பகலில் ...

ஆந்தை அடம் பிடித்தது பகலில் வேண்டாம் இரவில் செல்வோம் என்று சொல்லியது ...மற்ற விலங்குகள் இதை ஏற்கவில்லை ....


ஆந்தையின் தலைமையில் செல்ல தொடங்கின ....

ஒரு நெடுஞ்சாலை குறுக்கிட்டது ,,அப்போது தொலைவில் வாகனம் வந்து கொண்டு இருந்தது இதை நரி
பார்த்துவிட்டு ஆந்தையிடம் சொல்லியது ,ஆந்தையோ அப்படி ஒன்றும் இல்லை வாருங்கள் என்றது ...ஆந்தையை தான் ஏதோ சக்தி உள்ள தலைவனாக நினைத்து உள்ளார்களே ,,இதை நம்பி
பின் தொடர வேகமாக வந்த வாகனித்தில் அடிபட்டு அனைத்தும் இறந்தது .......

நீதி ; புதியதாக யாரோ அறிமுகம் ஆனால் அவர்களை பற்றி தீர விசாரித்து நட்பாக்கி கொள்ளவேண்டும் ..

எழுதியவர் : ராஜா (23-Jun-15, 7:40 pm)
சேர்த்தது : rajakiln
பார்வை : 783

மேலே