தேசபக்தி

.....................................................................................................................................................................................................
நாற்சந்தி முனையில்
நாய் விரட்ட ஓடினேன்..
சாரணர் படையில் தேசிய கீதம்..!
சடக்”கென நின்றேன்..
கண் உருட்டிப் பார்த்த போது..
கண்ணுடன் காது
இசை வந்த திசை நோக்கி
சிலையாகி நின்றிருந்தது...!
எனைத்
துரத்தி வந்த சிற்றுயிர்....!
....................................................................................................................................................................................