குருடாக்கிய காதல்
என் உளம் தங்கி உயிர் நீத்த அன்பா - நீ
அவளுக்கு கட்டியிருந்தால் மஞ்சள் கயிறு
சூழ்நிலை உனக்கு கொடுத்ததோ மரணக் கயிறு!
காதலுக்கு கண்ணில்லை என்பதால்தான்
கயிறையும் மாற்றி கழுத்தையும் மாற்றி
உன் கழுத்தில் மாட்டிக்கொண்டயோ!
யாரங்கே! நாதியற்ற காதலனை அழித்த
நீதியற்ற சாதி அரக்கனை மீதியின்றி அழித்துவிடு!

