உறவு ஒன்று உயில் எழுதுகிறது - 9
காலம் எனக்கிடும் கட்டளை - உன்
நினைவுகளுக்கு நான் தரப்போகும் நித்திரை.
தோற்றுப் போன உன் நினைவுகளுக்கு
தொட்டிலாட்ட புறப்பட்டு விட்டேன்.
கை ஒடிந்தவன் எழுத நினைத்த
கவிதை போல் மனதுக்குள்
முடங்கிப் போனது என் வார்த்தைகள்.
என்னை புரிந்து கொள்ளவும் முடியாமல்
பிரிந்து செல்லவும் முடியாமல்
நீ படும் அவஸ்தையை விட
எங்கே நீ என்னை பிரிந்து விடுவாயோ
என்ற அச்சத்தில்
நான் படும் அவஸ்தை அதிகம்.
உன்னருகில் நானிருந்த நாட்கள்
நிஜமெனும்போது
நீ மறந்து போனால் என்ன...
மனதுக்குள் மறைத்துக் கொண்டு போனால் என்ன.
நீ உதறிவிட்டுப் போன பிறகும்
எனக்கு வாழ்க்கை இருக்கிறது
உன் நினைவுகளோடு..
நீ பேசி சிரித்த நாட்களின் சந்தோசத்தை விட
பேசாமல் போன நாட்களின்
வருத்தங்கள் அதிகமாகி விட்டன...
அகவே
என்னை வெறுக்கும் உன் நினைவுகளிடமிருந்து
வெகு தூரம் விலகிப் போகிறேன்..