அறையில் ஆனந்தம்

ஓங்கி அறைந்த அப்பா !

ஒப்பாரி வைக்கும் மகன் !

ஒடுங்கி ஒழிந்த தாய் !

அழுகை அமைந்தபின்
அறையில் அமைதி !

அறைந்த கைகள் அவனை அருகில் அழைத்தன !

நடுங்கிய அவன் ஒட்டி ஒடுங்கிட
தட்டிக்கொடுத்து தயங்கிய மகனுக்கு தண்ணீர் கேட்டார் தந்தை !

கண்ணீர் துடைத்துக்கொண்டு தண்ணீர் குவளையுடன் தாய் !

தாகம் தனித்த மகனிடம் தன்மையுடம் கேட்டார் அப்பா !

தேர்வில் தவறியது தவறில்லையா ?

உன்னிடம் என்ன குறைவைத்தோமென்று !

உள்நாக்கை உன்று விழுக்கியவன் விம்பிச் சொன்னான்

உங்களை என்று !!

புரிந்தது தவறு !

ஆனந்த அழுகைகளில்

அறையில் ஆனந்தம் ..

எழுதியவர் : கேசவன் புருசோத்தமன் (24-Jun-15, 10:23 am)
Tanglish : aRaiyil aanantham
பார்வை : 1483

மேலே