நீல வண்ணத்தில்

வீசும் தென்றலுடன் வாய்
பேசும் ஆசை வரும்
உன் தும்மல் ஓசையினை
அது சுமந்து வந்தால்..

சுடும் சாலையுடன் நடை
போடும் ஆசை வரும்
உன் நிழல் ஒளியினை
அது சுமந்து நின்றால்..

ஓடும் ஓடையுடன் நீந்தி
நீராடும் ஆசை வரும்
உன் தேகம் தேய்த்தெடுத்ததை
அது சுமந்து பாய்ந்தால்..

என்னவென்று தெரியவில்லை
காலைப் பொழுதினிலேயே
என் காதலியின் நியாபகங்களை
கரைத்தெடுத்து காகிதம் நிரப்பச்
சொல்லி என் விரல் இடுக்குகளின்
காதலியான எழுதுகோல்
கண்ணீர் சிந்துகின்றன
"நீல வண்ணத்தில்"...



செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (25-Jun-15, 7:10 am)
Tanglish : neela vannathil
பார்வை : 107

மேலே