அன்பே உன் புன்னகை நானே

அன்பே.!

நான் உன் மூக்குத்தியானால்.!
உன் ஒவ்வொரு சுவாசமும்
என்னை கடந்தே செல்லும்

நான் உன் நெற்றிச்சுட்டியானால்.!
உன் குங்குமப்பொட்டில் குதித்து
கரைந்திருப்பேன்

நான் உன் காதணியானால்.!
உன் காதுகடித்து காதல்மொழி
பேசுவேன்

நான் உன் ரிப்பனானால்.!
உன் கருங்கூந்தலை
கோதி மகிழ்ந்திருப்பேன்

நான் உன் கழுத்தணியானால்.!
உன் கழுத்தில் கிச்சுகிச்சு
மூட்டி விளையாடியிருப்பேன்

நான் உன் மோதிரமானால்.!
உன் கைவிரல்
பிடித்து நடைபழகுவேன்

நான் உன் வளையலானால்.!
உன் கை அசைவிற்கு
கானம் அமைப்பேன்

நான் உன் கொலுசானால்.!
நானே உனக்கு வழிகாட்டுவேன்

நான் உன் ஒட்டியாணமானால்.!
உன் இடுப்பை சுற்றிவந்து
உலகைசுற்றியதாக
ஞானபழமும் கேட்டிருப்பேன்

எந்த நகையும் வேண்டாம் அன்பே.!

உன் புன்னகையானால் போதும்
என் மரணம் வரை சிரித்திருப்பேன்..

எழுதியவர் : பார்த்திப மணி (25-Jun-15, 8:44 am)
பார்வை : 357

மேலே