மதுக்குளத்து கொக்கு
யாரோடும் வருவாள்
அவள் ஒரு வேசியுமல்ல!
யாரோடும் போவாள்
அவள் ஒரு தாசியுமல்ல !
பளபளக்கும் உடலழகியை
பருக நினைத்து !
முன்னாடி வாநீ என்
கண்ணாடி மேனி என்பான் !
மூடில் அழைத்தாலும்
மூடித்தானிருப்பாள் !
மூடி திறந்தால் உதட்டோடு உதடாக
முத்தமிடுவாள்!
இரண்டரக்கலந்து விடுவாள்
உடல் வலியா உள்ளது வலியா !
தானாய் அகலும்
தற்காலிக நிவாரணம் !
வாழ்க்கையில் புயலடித்தால்
காணா விஷம் கலந்த
வெள்ள நிவாரணம் தரும்
கண்ணாடி மாளிகையது!
காலில்லா மாது
துணைக்காலில்லா மாது (மது)
மின்னலாய் மறையும் அவளின்
தற்காலிக சுகத்திற்கு ! உன்
பொற்காலத்தை அழித்து விடாதே !