பதில் சொல்லுங்கள்
அன்னை என்பவள் தெய்வமானால்.!
அவளுக்கு
அல்லவா கோவில்கள்
கட்டியிருக்க வேண்டும்.?
மனதில் கட்டிவிட்டோம்
என்று கற்பனை அளப்பதா.?
எப்படி கட்டுவது
நடமாடும் தெய்வத்திற்கு
என்று நடைமுறை பேசுவதா.?
இல்லை.!
முதியோர் இல்லங்கள் கட்டி
சிறப்பாக இயங்குகிறது-என்று
உண்மையை சொல்வதா.??
பதில் சொல்லுங்கள்.????