கடவுள் ஓர் புதிர்
![](https://eluthu.com/images/loading.gif)
கடவுளும் அதை சேர்ந்தவைகளும்
என்றும் ஓர் புரியாத புதிரே..!
இதையெல்லாம்
மூலநம்பிக்கை என்கிறது
ஓர்பிரிவு மூடநம்பிக்கை
என்கிறது மற்றொரு பிரிவு
கடவுள் சைவமா.?அசைவமா..?
அகிம்சையா.?வன்முறையா.?
ஒரு கடவுளுக்கோ பொங்கல்
மற்றொன்றோ முழுஆடு
ஒரு கடவுளுக்கோ ஊதுவத்தி
மற்றொன்றோ சுருட்டு
ஒரு கடவுளுக்கோ இளநீர்
மற்றொன்றோ மதுநீர்
இங்கே சிலகடவுளோ
அமைதிப்படை
இவர் கையில்
மயில்இறகும் மலரும்
சிலகடவுளோ அதிரடிபடை
இவர் கையிலோ
வீச்சருவாள் வேல்கம்பு
கடவுள் பதவி அவ்வளவு எளிதா.?
காவிதுணி அணிந்தவன்
கடவுள் ஆகிவிடுகிறான்.!
கோவில்கள் என்ன சிறையா.?
கடவுளை பூட்டிவைத்து மனிதன்
காவல் காக்கிறான்.!
கோவில் திருவிழாக்கள்
திட்டமிட்ட வணிகமா.?
கடவுளை காண கட்டணமாம்
உடனே காண சிறப்புக்கட்டணமாம்
கோவிலில் காலணிக்கும்
கடவுளின் அணிகலனுக்குமே
பாதுகாப்புஇல்லை
கற்பக்கிரகத்தில்தான்
கடவுள் இருக்கிறாரா.?
கற்பக்கிரகம் என்பது
பத்தாவது கோளோ..!
அதனால்தான் கடவுளை
காணமுடியவில்லையா.!
கடவுள் இருந்தால் அவரும்
மனிதனின் கட்டுப்பாட்டில்தான்
இருப்பாரோ..????