நமக்கிடையே இடைவெளி

எப்படியும்
விடிந்துவிடப் போகின்ற
இரவு தான் என்பதில்
ஓரு நிம்மதி...

நிமிடங்கள் ஒவ்வொன்றும்
கடந்துச் சென்றது
நினைவில் இருக்கிறது...

உன் நினைவுகள் என்றுமே
பாரம் தான்...
அவை ஈரமானவை என்பதால்...

நமக்கிடையேயான
இடைவெளி
இன்னும் அதிகரிக்க...
பிரிவிற்கான பாதைகள்
போடப்பட்டுவிட்டன...
இணையான பாதையாக
இருக்குமேயன்றி
இணைவது கேள்விக்குறியே...

காதல் என்னும் ஒற்றைச் சொல்
கனவில் மிதக்கச் செய்கிறது...
கவிதை எழுதச் செய்கிறது...
காத்திருக்கச் செய்கிறது...
கண்ணீர் வரச் செய்கிறது...
கசிந்துருகச் செய்கிறது...
கலங்கி நிற்க செய்கிறது..
காணாமல் போகச் செய்கிறது...

எழுதியவர் : நித்திலம் ரமேஷ் (25-Jun-15, 7:43 pm)
பார்வை : 105

மேலே