கதிர் காட்டும் வழி

கடலும் வானும் நிறம்மாறின
காணும் இடமெலாம் அழகாகின,
உடலில் அழகுடன் எழுகதிரே
உனக்குச் சொல்லிடும் பலகதையே,
கடமை இருக்குது உழைத்திடவே
காட்டிடு ஒளியை உலகினுக்கே,
அடைதல் இயற்கை அதன்முன்னே
ஆற்றிடு நற்பணி உலகினிலே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-Jun-15, 6:56 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 50

மேலே