வரவேற்கலாம்.
மந்திரிகள்
இனி மடார் மடார்
எனக் காலில்
விழுவதைப் பார்க்கலாம்
நரபலி கொடுப்பது கூட
நல்லது எனச்
சில ஜோதிடர் சொல்வதை
அம்மா டி.வி.யில்
கேட்கலாம்
தமிழ் இனம்
பற்றி பேசுவோரை
சிறைக் கம்பிகளுக்கு
பின் பார்க்கலாம்
எப்படி எனினும்
தொப்புள் கொடி
உறவுகளாம்
தமிழ் ஈழ மக்களுக்கு
துரோகம் இழைத்த
இன்றும் இழைக்கத்
துடிக்கும் காங்கிரசின்
தோல்வியை வரவேற்கலாம்.
வா.நேரு