உன் மௌனத்தால் தினம் மரணம் 555

உயிரே...
நீ என்னில் இருக்கிறாய் என்பதை
நம்ப மறுக்கிறாய் நீ...
உனக்காக தினம்
காத்திருந்து...
நான் சாலையோரம்
உறங்கிவிடும் நேரங்களில்...
உன் நிழல் என் மீது
பட்டுவிட்டால்...
என்னை கடந்து செல்வது
நீதான் என்று உணர்கிறேனடி...
நான் உனக்கு எழுதிய காதல் கடிதம்
உணர்த்தவில்லையா...
என் காதலை
உனக்கு...
நீயும் கொலை செய்து
கொண்டுதான் இருக்கிறாய்...
கத்தியின்றி ரத்தமின்றி
ஒரு மரணம் எனக்கு...
உன் மௌனத்தால்.....