இன்னும் உயிர்ப்புடன்

இன்னும் உயிர்ப்புடன்
கண்ணீர் குளம் வற்றிவிட்டது
கண்களும் வறண்டுவிட்டன
மனம் தரிசு நிலமாகிவிட்டது
தனிமையின் வெப்பம் வாட்டுகிறது
அனைத்தும் மாறிவிட்டது
நீயும் மாறிவிட்டாய்
காலமும் மாறிவிட்டது
தனிமையான பயணத்திற்கு
தயாராகிவிட்டேன்
நீயும் நானும்
சேர்ந்து வாழ்ந்த அந்தக்
குறைந்த கால நினைவுகளோடு
இருப்பினும்
என் மனதில்
உன் பிரிவினால்
உண்டான ரணம் மட்டும்
இன்னும் உயிர்ப்புடன்...
புலராத பொழுதுக்காக
காத்துக்கொண்டிருக்கும்
மலராத மொட்டாய்...