அ முதல் ஒள வரை வேண்டாம் ஃ

அ முதல் ஒள வரை ! வேண்டாம் ஃ !

அன்பினால் ஆயுதம் வெல்லும் ஆற்றல் வேண்டும்
ஆணவம் அகற்றி மெய்ப்பொருள் தேடும் ஆன்மா வேண்டும்
இரப்பவர் இல்லாத உலகம் வேண்டும்
ஈன்ற குழந்தையை கொல்லாது போன இந்தியா வேண்டும்
உண்மையை நேசிக்கும் உறவு வேண்டும்
ஊரைப்பற்றி சிந்திக்கும் உள்ளம் வேண்டும்
எளிமையான வாழ்வு என்றும் வேண்டும்
ஏற்றம் கொடுக்கும் ஏணிப்படியாய் வாழ வேண்டும்
ஐயம் தெளிய தேடும் தெளிவு வேண்டும்
ஒன்றாயிருப்பவனை உருகித் தொழ வேண்டும்
ஓதும்போதே உயிர் பிரியும் உவகை வேண்டும்
ஔவையின் தமிழ்போல் என் புகழ் பரவ வேண்டும்
அஃது வேண்டாம் அது ஆயுதம்
அமைதியில் உறைவோம் கனவுகளைப் போல ..

எழுதியவர் : இ ஆ சதீஸ்குமார் (27-Jun-15, 7:44 pm)
பார்வை : 320

மேலே