வாழ்க்கையெனும் இரயிலில் பயணிக்கும் மனிதன்
பெண்னிலத்தே வித்திட்டான்
அன்னிலத்தே கருவாகி
சென்னிலத்தே உருவாகி
மண்னிலத்தே விழுந்தான்
மானிடனாய்! அவனுக்கு.......
வாழ்க்கையெனும்
இரயிலில் பயணம்!
வந்த இடம் அறிந்தாலும்
போகுமிடம் அறியாத ஒரு பயணம்!
தேதி மாத வருடம் அறியாத
முன்பதிவு செய்யப்பட்ட பயணம்!
அம்பானியாக இருந்தாலும் மேலிடத்து
அதிகாரி இறங்கச்சொன்னால்
இறங்கவேண்டிய ஒரு பயணம்!
ஐயா நான் பில்கேட்ஸ் என்றாலும்
யுவர் டேட்ஸ்ஸார் க்லோஸ்டு என்று
அவனும் இறக்கிவிடப்படும் ஒரு பயணம்!
யோகா செய்தாலும் யாகம் வளர்த்தாலும் !
போகா ஊருக்கு போய்தான் ஆகவேண்டும் !
உலகத்திலேயே உயர்ந்த மருத்துவனுக்கும்
உதவுகிற கடைசி வார்த்தை !
எல்லாம் இனி அவன் கையில்தான் !
அது தெரியாவூர் முன்பின் அறியாவூர்
வண்டி எங்கே நிற்கும் என்றே தெரியாத நீ
வண்டியில் இருக்கும்போதே வாழ்ந்துவிடு!
நல்லவனாக இல்லாவிட்டாலும்! மனிதனாக!
நீ என்ன சாதியென்று உன்னைத் தின்னும்
புழுவுக்கும் தெரியாது ! விழுங்கும்
தீயிக்கும் தெரியாது !
நீ இறக்(ங்)கும் இடம் வருவதற்குள்!
உனக்குள் எரியும் சாதீயை அணைத்துவிடு
முடிந்தால் அழித்துவிடு !
இன்னும் மீதம் இருக்கிறது பயணம்!
சாம்பலாய் போகும் முன்னே சாதி-த்து-விடு !