ச்சீ என்ன இது
சிவப்பிற்கிடையே
கொஞ்சம் கொஞ்சமாய்
மஞ்சள்..
ஐந்து சரிவுப் பாதைகள்
வழுக்கி விழுந்தால்
பெரிய பள்ளத்தாக்கு..
பள்ளத்தாக்கு முழுவதும்
ஒட்டிக்கொள்ளும் பெரு
வட்டப்பூச்சிகள்..
நடுவில் பெரியதூண்
பிடித்து மேல் வர
மீண்டும் சரிவுப் பாதைகள்..
ச்சீ என்ன இது?
பூ அழகாகவேயில்லை...
--கனா காண்பவன்