இன்னொரு திருவிழா

புகைபிடித்தான், மதுகுடித்தான்
காலையிலும், மாலையிலும் குடித்தான்
வேலைக்குப் போகுமுன் குடித்தான்
வீட்டிற்குத் திரும்பும்முன் குடித்தான்.

வயிறும் கெட்டது, ஈரலும் கெட்டது
மரியாதை கெட்டது, மானம் கெட்டது
மரணம் வந்தது, இறுதிச் சடங்கும் வந்தது
சின்னஞ் சிறு பிஞ்சுகள், நிலைமை புரியவில்லை;

இன்னொரு திருவிழா என்று பந்தலைச்
சுற்றிச் சுற்றி வந்தன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jun-15, 7:19 pm)
பார்வை : 759

மேலே