யார் குற்றம்

பள்ளிக்கூடம் போனவள
பள்ளியறை அனுப்பிச்சது
யார் குற்றம்?
என் குற்றமா? இல்ல
என்ன பெத்தவ குற்றமா?

பாசமா வந்தவள
பாசாங்கா ஏமாற்றி
நக நட்ட வித்து
நட்ட நடு வீதியில விட்டது யார் குற்றம்?
என் குற்றமா இல்ல
என்ன கட்டுனவ குற்றமா

ஒத்த ரூபா சம்பாதிக்க துப்பில்லா போக்கத்தவனுக்கு மொவளா
பொறந்தது
யார் குற்றம்?
என் குற்றமா
இல்ல
என் செல்ல மொவா குற்றமா

கேக்க நாதியில்ல
பாலூட்ட திராணியில்ல
கையில காசில்ல
விக்க என்ன தவிர ஒன்னுமில்ல
மானத்த பாத்தா
மொவள பாக்க முடியாதேனு....
வெட்ட வெளியில நிக்க வச்சது
யார் குற்றம்?
என் குற்றமா
இல்ல
நா கும்புடுற சாமி குற்றமா

எழுதியவர் : நவின் (29-Jun-15, 6:47 pm)
Tanglish : yaar kutram
பார்வை : 1314

மேலே