ஏர்போர்ட்

ஒரு நாள் ராமும் , பாஸ்கரும் மலை பிரதேசத்தை நோக்கி ஒரு பயணம் செய்தார்கள் . அவர்கள் அழகிய மேற்கு மலை தொடர் அடிவாரத்தில் உள்ள தென்காசி பகுதியை சேர்ந்தவர்கள் , பணியின் நிமித்தமாக அவர்கள் இருவரும் அயல் நாட்டில் ஒரே நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள் . தற்போது கோடை கால விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பி உள்ளனர் . ராமுவுக்கு திருமணமாகி ஒரு வருடம் தான் ஆகிறது . பாஸ்கருக்கு திருமணம் வரன் நடந்து கொண்டு இருக்கிறது . இருவரின் குடும்பமும் இவர்களை நம்பித்தான் உள்ளது , நடுத்தரமான குடும்பம் . எப்போது இருவரும் வந்தாலும் மலை ஏற்றதை வழக்கமாக்கி கொள்வார்கள் ஏனென்றால் அவர்களின் மனதை ஒருங்கிணை படுத்துவதற்காகவும், இளைப்பாருவதர்காகவும் அதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அப்போது பாஸ்கர் ராமிடம் " இப்போது எப்படி உன் மனைவி குழந்தை குடும்பத்தை பிரிந்து இருக்கிறாய்? நான் திருமணமானவுடன் உள்ளுரிலேயே எதாவது ஒரு வேலையை பார்த்து இருந்து விடுவேன் ". அதற்கு ராம் " அங்கே அந்த மரத்தை பார் எத்தனை பறவைகளுக்கு உணவு கொடுக்கிறது; மழை பொழிவதற்கு காரணமாக இருக்கிறது ; எவ்வளவு நிழல் கொடுக்கிறது; நாம் வாழ்வதற்கு சுத்தமான ஆக்சிஜெனை கொடுக்கிறது, அந்த மரம் தான் என் அப்பா, தன் வாழ்வில் தன் எல்லா ஆசைகளையும் அடக்கி வைத்து விட்டு அந்த மரம் போல் தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் எங்களுக்காக கொடுத்தார் , எங்களுக்கு மட்டும் இல்லை இந்த நாடு மக்களுக்காகவும் சேவை செய்துள்ளார் இராணுவ வீரராக இருந்து. அவருக்காக நான் எதுவுமே செய்தது இல்லை . இனி வரும் என் வாழ் நாளில் அவருக்கும் என் குடும்பத்துக்கும் சேவை செய்யவே என் மனம் துடிக்கிறது, என் அப்பாவாக இல்லை என்றாலும் அங்கே பார்(மலை உச்சியில் இருந்து கீழே ) ஒரு விவசாயி விதை போட்டு கொண்டு இருக்கிறார், அந்த விதையாக என் வாழ்க்கையை தொடங்க இருக்கிறேன். எனக்கு இன்னும் ஒரு வருட காலம் அயல் நாட்டில் இருக்க வேண்டிய சூழல் . மீண்டும் திரும்பியவுடன் நம் ஊரிலே நமக்கு தெரிந்த அறிவியல் அறிவுடன் விவசாயத்தை தொடங்கி என் குடும்பத்தினருடன் வாழ்வதே என் விருப்பம் " என்று கூறினான் .
"உன்னுடன் நட்பு கொண்டிருப்பதில் இன்று நான் மிக்க மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்" என்று பாஸ்கர் கூறினான் .
அவர்களின் மலை ஏற்றம் மற்றும் விடுமுறை காலம் முடிந்தது . விமான நிலையத்தில் பாஸ்கரும் ராமும் தங்கள் குடும்பதினுரடன் வந்திருந்தார்கள். அனைவரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர். இருவரும் அயல் நாடு போய் சேர்ந்தார்கள் , மீண்டும் அடுத்த வருடம் ஒரு விடுமுறை பயணம் விமானம் இந்தியா புறப்பட தயாரானது , இருவரின் மனதிலும் அப்பாட இனிமேல் நம் ஊரிலே விவசாயத்தை தொடங்கலாம் என்று , ஆனால் ஊர் போய் சேர்ந்து தங்கள் குடும்ப சூழ்நிலை மற்றும் நம் நாட்டின் விலைவாசி இவர்களை பாதித்தது,
மீண்டும் ஒரு மலை ஏற்றத்தின் போது, ராம் பாஸ்கரிடம் மலை உச்சியில் இருந்து " அங்கே பார் நாம் அன்று பார்த்த விவசாயி விதைத்த விதை இன்று பெரிய கட்டிடமாக வளர்ந்து இருக்கிறது "என்றான் வேதனையுடன். பாஸ்கர் ராமிடம் " விவசாயத்தை இவ்வாறு அழித்து விட்டார்களே , நாம் மறுபடியும் அயல் நாடு தான் போக வேண்டுமோ ?"என்றான் . மீண்டும் விடுமுறை முடிந்தது எல்லாரும் கூடினார்கள் விமான நிலையத்தில் , இருவரின் மனதிலும் இந்த ஒரு முறை மட்டும் சென்று வரலாம் . அப்படியே ஒவ்வொரு வருடமாக செல்கிறது இவர்களது எண்ணங்கள் , இப்போது இவர்களும் மரமாக வளர்ந்து விட்டார்கள் .

எழுதியவர் : பிரேம் லெனின் (29-Jun-15, 8:13 pm)
சேர்த்தது : பிரேம் லெனின்
Tanglish : airport
பார்வை : 450

மேலே