சிலையாய் ஆகாதே
வளர்ந்து நிற்கும் தென்னையாய்
இருந்து இளநீர் கொடு-இல்லை.!
குறைந்து நிற்கும் வாழையாய்
இருந்து கனியை கொடு-இல்லை.!
இன்னும் குறைந்து வெண்டை
செடியாய் நின்று காயை கொடு
இல்லை.!
இன்னும் குறைந்து அகத்திக்
கீரையாய் நின்று இலையை கொடு
இல்லை.!
இன்னும் குறைந்து தரையில்
பூசணிக் கொடியாய் படர்ந்து
அதன் சுவையை கொடு.!
ஆனால்.!
தோழனே இரவும் பகலும்
திண்ணையில் படர்ந்து- உன்
தாயிற்க்கு துயரைக்கொடுக்காதே.!!
காற்றில் சருகாய் போகாதே.!
வீட்டு சிலையாய் ஆகாதே.!!