ரத்தமும் வியர்வையும் ஓர் நிறம் ஓர் சுவை - 12315

கொடுப்பதற்கு கடவுளுண்டு - நீ
எடுப்பதற்கு தயாராகு - உன்னை
கெடுப்பதற்கு யாருமில்லை - அன்பை
தொடுப்பதற்கு தயாராகு....!!

படிப்பதற்கு நல்ல குணங்களுண்டு - நீ
பிடிப்பதற்கு தன்னம்பிக்கை உண்டு - இன்றே
முடிப்பதற்கு கடமைகள் உண்டு - உடனே
இடிப்பதற்கு சாதித் தடைகள் உண்டு.....!!

கடவுளுக்கும் சாதி உண்டே ! மனிதன்
நடவுசெய் பயிர்களுக்கும் சாதி உண்டே !
முடமோ இம்மானுடச் சிந்தை - அதில்
விடமோ மதங்கள் எனும் கொடுமை.....!!

எழுதியவர் : ஹரி (30-Jun-15, 6:53 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 75

மேலே