என் மரணவலியிலும் உன் நினைவு 555
பெண்ணே...
உன் மௌனத்தின் சில ஊமை
இரவுகளுக்கு இடையே...
என்னில் பற்றி கொள்ளும்
உன் நினைவை தவிர்த்து...
தூக்கத்தை தொடர நினைத்தால்
முடியவில்லையடி...
நிச்சயம் முடியாதுதான்...
உன் மீதான காதலை அதிகபடுத்தும்
ஒவ்வொரு நாட்களும்...
என் வலி தெரியாமல்
இருந்தாலும்...
ஒவ்வொரு விடியலை
போலவே நீயும் சிரித்தாய்...
உன் சிரிப்புகுபின்
மறைந்து இருக்கும்...
என் மரணத்தை பற்றி கவலை
படமால் நானும் சிரித்தேன்...
இன்று துடிக்கிறேன்
மரண வலியில்...
உன்னை நினைத்து.....

