காதல் இனிமை

தூக்கம் தவிர்க்கும் தூங்கா மனங்களின்
ஏக்கத் தவிப்பு!
மதியின் ஒளியில் மயங்கித் துடிக்கும்
தனிமைக் கசப்பு!
விலங்காய் வாழ்க்கை விளங்கித் தெளியும்
வாழ்க்கைப் பிடிப்பு!
வசந்தத் தென்றல் வருடும் இனிமையாய்
இன்பக் களிப்பு!
இணையின் உணர்வை இதயம் காணும்
அன்பின் ஈர்ப்பு!
அந்நிய மனங்களின் அன்புச் சங்கமத்தில்
அழகாய் வாழும் காதல் ஆவர்த்தனம்!!!
காதல் இனிமை! காதலாய் எங்கும் இனிமை!

எழுதியவர் : கானல் நீர் (30-Jun-15, 7:47 pm)
Tanglish : kaadhal enimai
பார்வை : 215

மேலே