உறவு ஒன்று உயில் எழுதுகிறது - 12

தோள் சாயும் உறவே - ஒரு
தொலைவில் நிற்கும் நிலவே.
மனதிற்குள் நின்றாடும் மயிலே - உன்
மறுவார்த்தை ஏதும் இன்றி மன்றாடுகிறேன் .

நீ நிலம் பார்த்து போகின்ற பொழுது - என்
நிம்மதி குறைந்து போகின்றது மனதில்.
மனதுக்குள் மயிலிறகு தடவுகின்ற - உன்
பார்வையின் ஸ்பரிசங்கள் இல்லாதபொலுதில்
பயணத்தில் தொலைந்த பள்ளி சிறுவனாய்
பரிதவித்துப் போகிறது மனது.

எந்த வடிவதிற்குள்ளும்
அடங்கி விடாத ஒரு மேகத்தை போல்
என் ஆசைகள் எல்லா நாட்களிலும்
புதிது புதிதாய் தோன்றுகின்றன ...

நீ அழைத்த போதெல்லாம்
ஓடி ஓடி உழைத்த கால்கள்
நீ உதறித் தள்ளிய
மறு நொடியிலிருந்து வலிக்க ஆரம்பித்து விட்டன.

சந்தோசமாகத்தான் இருக்கிறேன்
உன்னை பார்க்காத பொழுதுகளில்
ஆனாலும் சில வேளைகளில்
உன்னை சிந்தித்து சிந்தித்து
சிறிது சிறிதாக செத்துப் போகிறேன்..

எழுதியவர் : parkavi (30-Jun-15, 10:18 pm)
பார்வை : 76

மேலே